அதிகாலை இலங்கையை வந்தடைந்த சினோபார்ம் தடுப்பூசி - Global Tamil Voice உலக தமிழ் குரல்

அதிகாலை இலங்கையை வந்தடைந்த சினோபார்ம் தடுப்பூசி

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ​மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த டோஸ்கள் இன்று அதிகாலை வந்தடைந்தடைந்துள்ளது. 
 குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துளளார். இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



About UPDATE